முப்பதாயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியைச் சேர்ந்த விவசாய தொழில் செய்து வரும் மணி என்பவர் மகன் செல்வகுமார் மீது ஆள் கடத்திய சம்பந்தமாக தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேற்படி வழக்கு சம்பந்தமாக செல்வகுமார் கடையம் காவல் நிலையத்தில் தினமும் நிபந்தனை ஜாமின் கையெழுத்து செய்து வந்துள்ளார்.அப்போது காவலர்கள் காவல் ஆய்வாளரை பார்க்கச் சொன்னதின் பேரில் கடந்த 11. 04. 2025 ஆம் தேதி அன்று காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை கடையம் காவல் நிலையத்தில் சந்தித்து வழக்கு சம்பந்தமாக பேசிய பொழுது காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா மேற்படி வழக்கினை சீக்கிரம் முடித்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை சீக்கிரம் வெளியில் எடுப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதற்காகவும் பணம் 30,000 லஞ்சமாக கேட்டுள்ளார் லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் 11ஆம் தேதி தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மேரிஜெமிதா என்பவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக 12.04. 2025 ஆம் தேதி நடத்தப்பட்ட பொரிவைப்பு நடவடிக்கையின் போது காவல் ஆய்வாளர் மேரிஜெமிதா கடையம் காவல் நிலையத்தில் செல்வகுமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கினை விரைந்து முடிப்பதற்காக ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் 30,000 லஞ்சமாக பெற்ற போது அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் நிலைய கண்காணிப்பாளர் பால் சுதர் தலைமையினர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Tags :