சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழக அரசு? - அன்புமணி

by Staff / 03-10-2023 12:38:23pm
சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழக அரசு? - அன்புமணி

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும். 69% இடஒதுக்கீட்டை காக்க வேண்டும் எனில் அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. பீகாருக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via