ஆஸ்திரேலியா, மாணவர் விசா நடைமுறைகளில் இந்தியாவை அதிக ஆபத்து அல்லது லெவல் 3 பிரிவில் வைத்துள்ளது.

by Admin / 14-01-2026 01:29:05am
ஆஸ்திரேலியா, மாணவர் விசா நடைமுறைகளில் இந்தியாவை அதிக ஆபத்து அல்லது லெவல் 3 பிரிவில் வைத்துள்ளது.

ஆஸ்திரேலியா, மாணவர் விசா நடைமுறைகளில் இந்தியாவை அதிக ஆபத்து அல்லது லெவல் 3 பிரிவில் வைத்துள்ளது. இந்தியா, இந்த பிரிவில் உள்ளதால் இந்திய மாணவர்கள் நிதி ஆதாரம் (வங்கி பண இருப்பு)மற்றும் ஆங்கில மொழி திறன் ஆகியவற்றுக்கான கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .போலி ஆவணங்கள் மற்றும் உண்மையான மாணவர்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆஸ்திரேலியா தனது சோதனைகளை தீவிரப் படுத்தி உள்ளது. இதனால் விசா நிராகரிக்கப்படும் விகிதம் அதிகரித்துள்ளது . ஆஸ்திரேலிய முன்னணி பல்கலைக் கழகங்களே சில இந்திய மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக, பஞ்சாப் ,அரியானா மாணவர்களை சேர்க்க தடை அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. 2024 முதல் நடைமுறைக்கு வந்த உண்மையான மாணவர் விதியானது மாணவர் உண்மையில் படிக்கத்தான் வருகிறாரா அல்லது வேலை செய்ய வருகிறாரா என்பதை தீவிரமாக ஆய்வு செய்கிறது.

 

 

Tags :

Share via