பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்க்கிறது
இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்க்கிறது. இம் மாநாட்டிற்காக அதிகாரப்பூர்வ இணையதளம், கருப்பொருள், இ லச்சினை ஆகியவற்றை இந்தியா வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு 2026 ஆம் ஆண்டு இந்தியா மீண்டும் பிரிக்ஸ் அமைப்பிற்கு தலைமை தாங்குகிறது..உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கூட்டு முயற்சி என்ற கருப்பொருளை மையப்படுத்தி இந்தியா செயல்பட உள்ளது18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது, இதன் மூலம் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள், தெற்குலக நாடுகளின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல், பொது உள்கட்டமைப்பு போன்ற முக்கிய முன்னுரிமைகளை முன்னிறுத்தி, உலக அரங்கில், இந்தியாவின் பங்கை வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஐ.நா மற்றும் உலக வர்த்தக அமைப்பில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது.டிஜிட்டல் ,பொது உள்கட்டமைப்பு,தெற்குலக நாடுகளுக்கு இந்தியா தனது டிஜிட்டல் அனுபவத்தைப் பகிர்தல்.நிலையான வளர்ச்சி: காலநிலை மாற்றம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து கவனம் செலுத்துதல். . ஈரான் ,எகிப்து ,எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இவ் அமைப்பிற்குள் இணைந்த பிறகு இந்தியா நடத்தும் முதல் தலைமைத்துவ மாநாடாகும்..
Tags :


















