இந்திய வீரர் ஜூன் 19-ல் விண்வெளி பயணம்

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஹு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரோ வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானியாக செயல்பட உள்ளார். பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படும் டிராகன் விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் அங்கு 14 நாட்கள் தங்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.
Tags :