27 ஆம் தேதி முதல் குருவாயூர்-புனலூர் ரயில் சேவை மதுரை வரை நீட்டிப்பு.

by Editor / 19-08-2023 11:11:10am
27 ஆம் தேதி முதல் குருவாயூர்-புனலூர் ரயில் சேவை மதுரை வரை நீட்டிப்பு.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இரண்டாண்டு தொடர்ந்து எழுப்பிய கோரிக்கை, கடைசியாக 11.08.2023 அன்று ரயில்வே அமைச்சரிடம் நேரில் கடிதம் தந்து வலியுறுத்திய கோரிக்கையின் அடிப்படையில்,  குருவாயூர்-புனலூர் இடையே இயக்கப்பட்டுவரும்  குருவாயூர்-புனலூர்ரயில் தற்போது மதுரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.அதன்படி  மதுரையில் இருந்து விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்,  ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை,ஆரியங்காவு,புனலூர், வழியாக 27.08.23 முதல் குருவாயூர்- மதுரை- குருவாயூர் விரைவு வண்டி இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி வண்டி எண்: 16327 (மதுரை-குருவாயூர்) 27.08.23 முதல்.மதுரையிலிருந்து மதியம் 11:20 மணிக்கு புறப்பட்டு  குருவாயூர்க்கு - அதிகாலை 02:10 செல்லும்.இதேபோன்று வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) 28.08.23 முதல் குருவாயூரிலிருந்து காலை 05:50 புறப்பட்டு மதுரைக்கு  இரவு 07:15 மணிக்கு சென்றடையும்.முன்பதிவில்லா பெட்டிகள்: 11 ஸ்லீப்பர் பெட்டிகள்: 2,மூன்றடுக்கு ஏ/சி: 1,மொத்தம்: 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.முன்பதிவு விரைவில் துவங்கும்.இனி விருதுநகர், நெல்லை மேற்கு பகுதி மற்றும் தென்காசி மாவட்ட மக்கள்  நேரடியாக குருவாயூர் செல்வதற்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.இந்த ரயில் ஏற்க்கனவே குருவாயூர்-புனலூர் இடையே   இயங்கிவரும் இந்த ரயில் தற்போது  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : குருவாயூர்-புனலூர் ரயில் சேவை மதுரை வரை நீட்டிப்பு.

Share via