தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா இன்று.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படஉள்ளது.. மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் தனியா நட்சத்திர விடுதியில் இவ்விழா நடைபெறுகிறது. காலை 10 .30 மணிக்கு விழா தொடங்குகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிப்பதோடு பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிகழ்வில் கிறிஸ்துவ மதப் பெரியோர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக, ஏற்கனவே கியூ. ஆர் குறியீடு அடங்கி அனுமதிச்சீட்டு பெற்ற சுமார் 1,500 கட்சி நிர்வாகிகள் மற்றும் அழைப்பாளர்களுக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முதல் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுகிறது.
Tags :



















