விபத்தில் பலியான சிறப்பு உதவி ஆய்வாளர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு சாலைப்புதூர் தெற்கு தெருவைச்சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் சங்கர் வயது 51,இவர் கோவில்பட்டி கயத்தாறு பகுதியில் தனிபிரிவு காவலராக பணியாற்றி வந்தார் தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் நேற்று மதியம் கயத்ததாறில் இருந்து சாலைப் புதூர்க்கு இருசக்கர வாகனத்தில் பனிக்கர்குளம் விலக்கு அருகே சென்று கொண்டு இருந்த போது நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகன நிலைதடுமாறி அருகில் உள்ள புளிய மரத்தில் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் முலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags :



















