2 வருடங்களாக மாணவர்கள் கல்வி கற்றல் இல்லாமல் இருந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர் - அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 02-05-2022 05:24:41pm
2 வருடங்களாக மாணவர்கள் கல்வி கற்றல் இல்லாமல் இருந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது.இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது.2 வருடங்களாக மாணவர்கள் கல்வி கற்றல் இல்லாமல் இருந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர் -இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ்   செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories