பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள் அசத்திய பாஜகவினர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள். நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் வாழ்க்கை குஜராத்தில் தொடங்கி நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பரவி ஒரு தேசத்தின் தலைவராக இன்று அவர் மாறியிருக்கிறார்.
1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குஜராத்தின் மெஹ்சானாவில் பிறந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி, தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் ஆகியோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை ஆவார். தனது வாழ்வாதாரத்தை தேனீர் கடையில் தொடங்கிய மோடி, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் உதவியாளராகத் தொடங்கி, 13 ஆண்டுகளாக பாஜகவின் குஜராத் பொதுச் செயலாளர், தேசியச் செயலாளர், குஜராத் முதல்வராக இருந்தவர். பின்னர் தொடர்ந்து இரண்டு முறை நாட்டின் பிரதமரானார்.
2004 மற்றும் 2009ல் தொடர்ந்து இரண்டு லோக்சபா தேர்தல்களில் தோல்வியடைந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆட்சி வாய்ப்பை இழந்து தவித்திருந்த பாஜகவுக்கு ஏறுமுகத்தை கொடுத்தவர் மோடி.
2014ல், பா.ஜ.,வை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து தொடர்ச்சியாக தற்போது வரைஆண்டு வரும் மோடியின் அதிகாரத்தை நாடு நேரடியாகப் பார்த்து வருகிறது.மேலும் வரும் பாராளுமன்றத்தேர்தலிலும் மோடியே பிரதம வேட்பாளர் என்ற முழக்கங்களும் அவரது பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் குரலெழுப்பபட்டு வருகிறது.மேலும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும்,அன்னதானங்களும்,மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகளும் நடந்துவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : நரேந்திர மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள்