போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பாம்புகள்

by Staff / 17-09-2022 01:43:26pm
போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பாம்புகள்

கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள கம்பம்மெட்டு காவல் நிலைய பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குரங்கு தொல்லையை தடுக்க ரப்பர் பாம்புகளை பயன்படுத்தும் சீனர்கள் சோதனை வெற்றி பெற்றதால் கம்பம்மெட்டு போலீசாரும் அதே வழியை பின்பற்றி ரப்பர் பாம்புகளை மரக்கிளைகளில் வைத்து நிம்மதி அடைந்துள்ளனர்.

அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வரும் குரங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. வீடுகளுக்கு வந்து உணவுப் பொருட்களையும், துணிகளையும் கூட தூக்கிச் சென்று விடுகின்றன. குரங்கு தொல்லை காவல் நிலையத்திற்கும் பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் காவல் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் ரப்பர் பாம்புகளை வைத்து குரங்குகளுக்கு பயத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஸ்டேஷன் மற்றும் அதைச் சுற்றியுள்ள மரங்களில் பாம்புகளைப் பார்த்த பிறகு, குரங்குக்கூட்டத்தின் தொல்லை சற்று குறைந்திருப்பதா எஸ்.ஐ. பி.கே. லால்பாய் கூறினார்.உடும்பஞ்சோலை பகுதியில் உள்ள தனியார் ஏலக்காய் தோட்டத்தில் குரங்குகளின் தொல்லை அதிகமாக காணப்பட்ட நிலையில், சீன ரப்பர் பாம்புகளை காவலாளியாக வைத்து நடத்திய சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, இந்த முயற்சியை போலீசாரும் கையில் எடுத்தனர்.
 

 

Tags :

Share via