"கைம்பெண்ணைக் கணவர் வீட்டைவிட்டு வெளியேற்ற முடியாது" - கோர்ட் தீர்ப்பு

by Editor / 06-06-2025 04:27:52pm

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 41 வயது பெண், தனது கணவர் இறந்த நிலையில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரை வீட்டை வெளியேறுமாறு கூறும் மாமியார், மாமனார் மீது வழக்கு தொடர்ந்தார். இது கேரளா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி. சினேகலதா, “குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 17இன் கீழ், கணவர் இறந்த பிறகும் கூட குடும்ப உறவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும், கணவரது வீட்டில் வாழ உரிமை உண்டு. அவரை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது” என தீர்ப்பு வழங்கினார்.

 

Tags :

Share via