மர்மமான முறையில் மாணவி உயிரிழப்பு

நாமக்கலைச் சேர்ந்த பவபூரணி (28), கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை படித்து வந்தார். கடந்த 6-ம் தேதி, விடுதியின் கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த மரணத்தைத் தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக விசாரணை தொடங்கியுள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொன்தோஷ் ஆகியோர் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு வந்து, நிர்வாகிகள், மருத்துவர்கள், மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை அறிக்கை நீதிபதியிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Tags :