தமிழ் , இந்தியாவின் பெருமிதம் - பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் ,....
பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் இந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சியில் , தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி என்றும் அதன் இலக்கிய வளம் மிகவும் செழுமையானது என்றும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் பெருமை குறித்து புகழாரம் சூட்டினார். இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஜி நாட்டில் ராகி ராகி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முதல்முறையாக தமிழ் தினம் கொண்டாடப்பட்டதை அவர் பெருமிதத்தோடு தெரிவித்தார் அங்கு சிறுவர்கள் தமிழில் கவிதைகள் வாசித்ததும் உரையாற்றிலும் மனதை தொட்டதாக வும் வாரணாசியில் அண்மையில் நடைபெற்ற நாலாவது காசி தமிழ் சங்கம் பற்றி தமிழ் கற்கலாம் என்ற கருப்பொருளின் கீழ் அங்குள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்தி பேசும் மாணவர்கள் ஆர்வமுடன் தமிழ் கற்றதையும் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே தமிழ் மொழி மீதான ஆர்வம் அதிகரித்து வருவது இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்று என்றவர் குறிப்பிட்டதோடு தமிழ் கலாச்சாரம் உயர்வானது .தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம் என்று தமிழிலே பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Tags :



















