போதைப்பொருள் கடத்தல்: சென்னையில் 3,778 பேர் கைது

சென்னையில் கடந்த 11 மாதங்களில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 3,778 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த 11 மாதங்களாக போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,534 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சார்பில் தனிப்படை அமைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :