ஒரே தெருவில் 12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை..

by Staff / 10-07-2024 04:47:21pm
ஒரே தெருவில் 12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை..

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளியில் 74 மாணவர்கள் படித்து வரும் நிலையில் கீழத்தெரு பகுதியை சேர்ந்த 12 மாணவர்களுக்கு குடிநீரால் பரவும் A வகை வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் சில நாட்களாக அடைப்பு இருந்ததாகவும், விரைவாக சரி செய்யப்படும் என்றும் அன்னவாசல் ஒன்றிய அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via