முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம்- கருணாஸ் சாகும்வரை உண்ணாவிரதம்

by Editor / 30-10-2022 09:13:07am
 முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம்- கருணாஸ் சாகும்வரை உண்ணாவிரதம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் அங்கு அரசியல் கட்சியினர் சார்பில் சுவரொட்டிகள், பதாகைகள், கொடிக்கம்பங்களை வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு திருவாடானை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி நிறுவனருமான கருணாஸ் அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம் என்று பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றும் வைத்துள்ளார். இந்த கட் அவுட்டை போலீசார் அங்கிருந்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கருணாஸ் சிலரின் தூண்டுதலின் பேரில் தான் காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இந்த செயலை கண்டித்து தான் பசும்பொன்னில் கட் அவுட் இருந்த அதே இடத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவுள்ளேன் என அவர் அறிவித்துள்ளார்.இதன் காரணமாக அந்தப்பகுதியில் பரப்பரப்பு அதிகரித்துள்ளது.காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo