துரித நடவடிக்கை; அசம்பாவிதங்கள் தவிர்ப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஆகியோர் ஆய்வு மேற்கொணடனர். அப்போது மா.சுப்பிரமணியன் கூறுகையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது மருத்துவமனைகளின் சிகிச்சை உபகரணங்கள் என சுகாதார கட்டமைப்புகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், வெள்ளம் சூழ தொடங்கிய உடனே மருத்துவமனைகளில் முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார்.
Tags :