நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.

by Admin / 30-03-2024 12:36:52am
நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக காலமானார். .நடிகர் முரளியின் தந்தை இயக்குனர் சித்தலிங்கையாவின் சகோதரி மகன் இவர்.. சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பட்டப் படிப்பை படித்தவர்.. கமலஹாசனின் மருதநாயகம் படத்தின் செட் புரெடக்சன் மேனேஜராக தனது திரைப்பட பணியை தொடங்கியவர்.. சித்தி தொலைக்காட்சி தொடரில் நடித்ததின் மூலமாக திரை வாழ்க்கைக்குள் நுழைந்தவரின் முதல் படம் ஏப்ரல் மாதத்தில் ...அதனை தொடர்ந்து காதல் கொண்டேன் .சூர்யாவுடன் இணைந்து காக்க.. காக்க.., கமலஹாசன் உடன் இணைந்து  வேட்டையாடு விளையாடு என்கிற படத்தின் மூலமாக குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்தவர். தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி நின்றவர். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் டேனியல் பாலாஜி நடித்து தன்னுடைய முத்தரையை பதித்தவர். 19 75 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி பிறந்த இவர் . 46 ஆவது வயதில் இன்று மாரடைப்பின் காரணமாக உயிர் துறந்து உள்ளது திரைப்பட உலகுக்கு ஒரு பேரிழப்பு.

 

Tags :

Share via