மனைவி குழந்தைகளை வெறி கொண்டு தாக்கிய பிட்புல் நாய்

அரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள பலியார் குர்த் கிராமத்தில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை பிட் புல் நாய் தாக்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கால், கை மற்றும் தலையில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகளும் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை அன்று தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்தபோது, அவர்களது செல்ல நாய் தனது மனைவியைத் தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, இரண்டு குழந்தைகளையும் செல்லப்பிராணி தாக்கியுள்ளது என முன்னாள் கிராம தலைவர் சூரஜ் தெரிவித்துள்ளார். நாயை பலமுறை தடியால் தாக்கியும் அது கடிப்பதை நிறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags :