“திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது” - எல்.முருகன் பேட்டி

by Editor / 19-04-2025 12:54:47pm
“திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது” - எல்.முருகன் பேட்டி

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக வரலாற்றில் மிகப்பெரிய தோல்வி அவர்களுக்கு காத்திருக்கிறது. வரும் 2026 தேர்தலில், திமுக கூட்டணி படுதோல்வி அடையும். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நீட் தேர்வு விவகாரத்தில் திமுக போலி நாடகம் நடத்தி வருகிறது. மத்திய அரசுடன் ஸ்டாலின் மோதல் போக்கை கடைபிடித்து தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்து வருகிறார்” என்றார்.

 

Tags :

Share via

More stories