11 வயது சிறுவனின் வயிற்றில் சிக்கிய தங்கம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி

சீனாவைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த பெற்றோர், சிறுவனை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் சிறுவனின் குடலில், அடர்த்தியான உலோகப் பொருள் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்தபோது அந்த உலோகம் தங்கம் என தெரியவந்துள்ளது. சிகிச்சை முடிந்த நிலையில் சிறுவன் நலமுடன் இருக்கிறார்.
Tags :