இந்திய மாணவி துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி

by Editor / 19-04-2025 01:05:55pm
இந்திய மாணவி துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி

கனடாவில் வேலைக்குச் செல்லும் வழியில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, ​​தவறுதலாக வந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து 21 வயது இந்திய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆனால் குண்டு குறி தவறி மாணவி மீது பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர் மொஹாக் கல்லூரியில் படிக்கும் ஹர்சிம்ரத் ரந்தாவா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதே போல் துப்பாக்கிச் சூட்டில் சில குண்டுகள் அருகில் இருந்த வீட்டிற்குள்ளும் பாய்ந்துள்ளது. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

Tags :

Share via