ஆயிரம் குடங்கள் வெண்ணெய் காணிக்கை கேட்ட பெருமாள்
கும்பகோணத்திற்கும் மயிலாடுதுறைக்கும் இடையே பத்து கி.மீ .தொலைவில் உள்ள தேரழுந்தூர் பெருமாள் பசுக்களை காப்பவன் என்பதால் ஆமருவியப்பனாக அழைக்கப்பட்டு சேவிக்க பெரும் பெருவுடையான் எம்பெருமாள் உலகில் எப்பொழுதெல்லாம அதர்மங்கள் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் அவதாரயெடுத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட வந்தவன் .அவனின் 108 திவ் தேசங்களுள் பத்தாவது பதி... தேரழுந்தூர் மணவாள மாமுனி மங்களாசனம செய்த தலம் .திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசனம் செய்த புனித சேத்திரம் .13 அடி உயரத்தில் சாலி கிராமத்தால் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக இடது கையில் கதையு ம் வலது கையில் அபயஹஸ்தமும் மேல் உள்ள இடது கையில் சங்கும் வலது கையில் சக்கரமுமாக காட்சி தருகிறார் .உற்சவர் உபநாச்சியாருடன் ஆ மருவியப்பனுடன் பசு கன்றுகளுடன் எழில் கோலம் கொண்டுள்ளார் .உடன் பார்வதி தேவியார் பசு வடிவிலுள்ள மார்கண்டேயன் ,உபரி சரவதி ,அகத்தியர் இருக்கின்ற காட்சி கண்கொள்ளா காட்சி.பெருமாளுடன் கருடாழ்வார் 108 திருப்பதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர்,நாச்சியார் கோவில் ,தேரழுந்தூர் ஆகிய மூன்று பதிகளில் தான் உள்ளார். பண்டைய காலத்தில்,உபரிசரவசு என்கிற மன்னன் நேர்மையான ஆட்சியையும் பெருமாள் மீது கட்டுக்கடங்காத பக்தியையும் கொண்டு திகழ்ந்து வந்தான். அவன் பெருமாளை காண வேண்டுமென்று யாகம் நடத்தலானான்.யாகத்தில் பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் வருகை புரிந்திருந்தனர். ரிஷிகள் மிகச்சிறப்புடன் நடத்தும் வேள்வியின் போது பக்திமேலிட நின்ற உபரி சரசுவிற்கு அக்னியின் நடுவே நாராயணன் காட்சி கொடுக்க...உணர்ச்சி சகாந்தளிப்பில் ,இதோ கோவிந்தன் ...இதோ கோவிந்தன் என்று உணர்ந்தார் ஒதும் உத்தமர் நாமத்தை உரக்க..உச்சரிக்க . வேள்வி பணியில் ஈடுபட்ட ரிஷிகள்,அரசே ..தவமேற் கொள்ளும் எங்களால் கூட காண்பதற்கரிய உலகளந்த உத்தமனை நீர் எப்படி காண முடியும் என்று கூறி மன்னரின் கருத்தை மறுக்க..அந்தகணம் ,அங்கே ஓர் அசரீரி தோன்றி....யாகம் செய்வதன் மூலமோ..தவம் செய்வது மூலமோ என்னை கண்டறிய இயலாது .உண்மையான நம்பிக்கை கொண்டு எம்மை வழி படுவோருக்கே காட்சி தருவேன்.உபரி சரவசுவின் தூய்மையான பக்தியேஎன்னை அவன் தோன்ற செய்தது என்று கூறியது. உடன் ரிஷிகளும் தேவர்களும் மன்னனை போற்றினர். தேவேந்திரனோ தாம் வான் வழியே சென்று பெருமளின் திருப்பணிகளை மேற்கொள்ள வைத்திருந்தன வானூர்தியை வழங்கினான்.அதைப்பெற்ற பின்பு உபரிசரவசுவிற்கு கர்வம் வர ஆரம்பி த்தது.தன் வானூர்திக்கு கீழே உள்ள அனைத்தும் தனக்கு அடிமை என்றும் வான் வெளியில் ஊர்தியை செலுத்துவதில் வல்லவன் என்றும் பெருமிதம் கொண்டான் .இப்படியான பொழுதில் ,சிவபெருமானும் பார்வதியும் சொக்காட்டன் ஆட...கண்ணன் நடுவராக வீற்றிருந்தார். ஆட்ட முடிவில் பார்வதி தானே வெற்றிபெற்றதாகக்கூற...சினம் கொண்ட சிவன். பார்வதிதேவியை பசுவாக மாற சபித்தார் . பசுவாகிய தேவி ஆற்றுக்கரையோரம் மற்ற பசுக்களுடன் இருந்தது. தம் தங்கையை பாதுகாக்கும் பணியிலும் உபரி சரவசுவின் ஆணவத்தை அழிக்கும்பொருட்டும் பெருமாள் ஆடு மேய்க்கும் இடையனாக அவதரித்தார் .உபரிசரவசு வான் வெளியில்வருகையில்,பூமியில் பசு கூட்டங்களுக்கு நடுவே நின்று புல்லாங்குழல் இசைத்துக்கொண்டருக்கும் கோமகன் யாரென்றுதெரியாது தேரினை ஒட்டிச்சென்றான். அவன் ஆணவத்தை அடக்கக் கருதிய கார் வண்ண மேனியான்,தேரின் நிழலை தம் பூம் பாதங்களால் அழுத்த,தேர் மண்ணுக்கு வந்து விட்டது. இதனையறிந்த உபரிசரவசு தம் தவறை அறிந்து பெருமாளைபணிந்தான் . பெருமாளோ,உபரிசரவசு நீ செய்த தவறுக்கு மன்னிப்பாக வெண்ணெய் நிரம்பிய ஆயிரம் குடங்களைத்தர வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.அவனும் 999 குடங்கள் வெண்ணெய் குடங்களை பெருமாளிடம் வைத்தான் ...எவ்வளவோ முயன்றும் ஒரு குடம் வெண்ணெய் கிடைக்கவில்லை. பெருமாளுக்குத் தெரியவா போகிறது என்று ஒரு காலி குடத்தையும் சேர்த்து ஆயிரம் குடமாக வைத்தான். பரமாத்மாவிற்கு அவன் ஏமாற்று வேலை தெரியாத என்ன..உபரிசரவசுவிடம் ஒருகுடம் வெற்றாக இருப்பதை கூற..அவன் திகைத்து நிற்க..பின் பெருமாளின் திருவிளையாடல் என்பதுஅறிந்து ..பெருமாளின் பொற்பாதங்களில் சரண் புகுந்தான். பெருமாள்.நான்குகரங்களுடன்ஆமருவியப்பனாக கன்றுமபசுவுமாக அரசனுக்கு காட்சிநல்கினார்.
Tags :