தை அமாவாசை மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கீரிட அலங்காரம் செய்யப்படும்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

by Editor / 30-01-2022 10:00:15pm
தை அமாவாசை மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கீரிட அலங்காரம் செய்யப்படும்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும், பிரசித்தி பெற்ற சிவாலயங்களிலும்  முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் நிலையில்,
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை அமாவாசை தினத்தையொட்டி  காலை மற்றும் மாலை மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கீரிடம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்படும் எனவும், சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படும் எனவும், பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்யலாம் என கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories