தேமுதிக மாநாட்டில் கட்சியின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் -பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக மாநாடு ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அதற்கு முன் வரும் யூகங்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுக்கு அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார். இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை தேமுதிக சுதீஷ் நேரில் சந்தித்து விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்திற்கு வருக தருமாறு அழைப்பிதழ் வழங்கி கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags :


















