சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்கல்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
இந்தியாவில் சத்தீஸ்கர் ராய்ப்பூர், மத்திய பிரதேசம் ஜபல்பூர் போன்றார் பகுதிகளில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்கல்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக கண்டித்துள்ளார். கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது தேவாலயங்களை தாக்கி சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்துத்துவா வெறி கும்பலின் வன்முறை செயல்களை கண்டித்து உள்ளார். வன்முறையில் ஈடுபடும் எத்தகைய நபர்களை அந்தந்த மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வது ஜனநாயகத்தின் கடமை என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
Tags :



















