கள்ளக்குறிச்சி விவகாரம்.. ஆளுநருடன் பிரேமலதா சந்திப்பு

by Staff / 28-06-2024 02:58:45pm
கள்ளக்குறிச்சி விவகாரம்.. ஆளுநருடன் பிரேமலதா சந்திப்பு

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரி பிரேமலா ஆளுநர் ரவியிடம் மனு அளித்தார். அப்போது கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்து அவை தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை கோரி மனு அளித்தார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

 

Tags :

Share via

More stories