கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் அத்தியாவசிய பணிகள் முடக்கம்.

by Staff / 09-07-2025 09:52:14am
கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் அத்தியாவசிய பணிகள் முடக்கம்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டமானது நடத்தப்படும் என சிஐடியு, ஏஐடியுசி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகளானது இயக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதும், தமிழக எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் முழு அடைப்பு போராட்டமானது தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவைகள் செயல்படாமல் உள்ளன.

குறிப்பாக, சிஐடியு மற்றும் ஏஐடியுசி அமைப்புகள் சார்பில் இந்த முழு அடைப்பு போராட்டமானது நடத்தப்பட்டு வரும்  நிலையில், தமிழக பகுதியை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் இந்த அமைப்பினர் அதிகம் உள்ளதால் முழு அடைப்பு போராட்டமானது தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 இதன் காரணமாக, நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் தங்களது பணிக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வரும் நிலையில், முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் கேரளாவை சேர்ந்த பொதுமக்களும்  தங்களது அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Essential services are suspended due to the ongoing shutdown in Kerala.

Share via