சென்னை துறைமுகத்தைச் சார்ந்த சில கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள்வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன..

by Admin / 11-12-2025 09:08:32am
சென்னை துறைமுகத்தைச் சார்ந்த சில கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள்வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன..

சென்னை துறைமுகத்தைச் சார்ந்த சில கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இன்று டிசம்பர் 11ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர் சங்கங்களும் இதில் பங்கேற்கவில்லை. சென்னை துறைமுகத்தைச் சேர்ந்த 13 கண்டெய்னர் லாரி சங்கங்கள் மற்றும் 75 பேர கனரக வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.. வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் .ஆன்லைன் அபராதங்களை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளதால், நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் மற்றும் கனரா வாகனங்கள் முடக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் ஒப்பந்ததாரர்கள் கமிட்டியை சேர்ந்தவர்கள் ,இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை .மாறாக ,அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்த கூட்டமைப்பு டிசம்பர் 10ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து இந்த போராட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .தமிழ்நாடு முழுவதும் முழுமையான வேலை நிறுத்தம் இல்லை என்றாலும், சென்னை துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories