செங்கோட்டையில் தாய்ப்பால் வாரவிழா கொண்டாட்டம்
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து செங்கோட்டை ரோட்டரி கிளப் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் தாய்ப்பால் ஊட்டும் வார விழா நடந்தது. விழாவில் ரோட்டரி மாவட்டம், துணை ஆளுநர் பால்ராஜ் ரூபாய் 25,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார். விழாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜகோபால் தலைமை தாங்கி தாய்ப்பாலின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கி கூறினார். ரோட்டரி கிளப் தலைவா் அபுஅண்ணாவி, செயலாளா் தேன்ராஜ், பொருளாளா் சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனா. ஒருங்கிணைப்பாளா் மாரிமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், செவிலியர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Tags :