தொண்டையில் சிக்கிய புரோட்டாவால் உயிரிழந்த வாலிபர்

by Editor / 24-08-2022 08:28:00pm
தொண்டையில் சிக்கிய புரோட்டாவால் உயிரிழந்த வாலிபர்

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள புரோட்டாக் கடையில் பாலாஜி என்பவர் புரோட்டா வாங்கியுள்ளார். பின்னர் தனது பணி முடிந்து உரம் ஏற்றிச் சென்ற நண்பரின் லாரியில் கட்டப்பனாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியில் வைத்து புரோட்டா தின்றுகொண்டிருந்தபோது புரோட்டா திடீரென அவரின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதில் மூச்சி விட அவர் சிரமப்பட்டுள்ளார். இதை அறிந்த லாரி ஓட்டுநரான அவரது  நண்பர் உடனடியாக அந்த பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும், புரோட்டா அவர் தொண்டையில் வசமாக சிக்கிக்கொண்டதால் மூச்சி விட முடியாமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பாலாஜிக்கு சாந்தி என்ற மனைவியும், அர்ஜுன், அஸ்வின் என்ற குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார்  இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo