தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தமிழகத்தில் குற்றங்களைத் தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற இந்த விடியா அரசின் முதல்வர், விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், இன்று தமிழகம் கொலைக் களமாக மாறி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் காவல்துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. சட்டம் -ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம் -ஒ ழுங்கை கவனிக்கும் லட்சணமா? விடியா திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று இடப்பாடி பழனிசாமி அறிக்கைவிடுத்துள்ளாா்.
Tags :