மனைவியுடன் சேர சிறுவனை பலி கொடுத்த நபர்

ராஜஸ்தான் மாநிலம், கைர்தாலில் பகுதியை சேர்ந்தவர் மனோஜ், குடும்ப பிரச்சனை காரணமாக இவரது மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில், மனைவியுடன் மீண்டும் சேர முயற்சித்த அவர், சாமியார் ஒருவர் கூறியதை கேட்டு தனது சகோதரியின் 5 வயது மகனின் ரத்தம் மற்றும் ஈரலை எடுத்து நரபலி கொடுத்துள்ளார். இதையடுத்து, மனோஜ் மற்றும் சாமியாரை காவல்துறையினர் நேற்று (ஜூலை 23) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :