நல்வாழ்வு மையங்களில் வீட்டிலிருந்தே மருத்துவ ஆலோசனை பெறும் வசதி இன்று தொடக்கம் - மன்சுக் மாண்டவியா தகவல்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த மாத இறுதிவரை 1,17,440 மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த மையங்களில் வீட்டில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறும் வசதியான 'இ-சஞ்சீவனி' முறையை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
அதன்படி 1 லட்சம் நல்வாழ்வு மையங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் இ-சஞ்சீவனி முறை அமல்படுத்தப்படுவதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இதன் மூலம் சாதாரண குடிமக்களும் நாட்டின் மிகப்பெரிய டாக்டர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற முடியும் என அவர் கூறியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மீதான பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை இந்த மையங்கள் நிஜமாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
Tags :