கோவில்பட்டி பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக  மழை - மின்னல் தாக்கியதில் 18 ஆடுகள் உயிரிழப்பு

by Editor / 11-08-2024 08:05:29pm
கோவில்பட்டி பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக  மழை - மின்னல் தாக்கியதில் 18 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இன்றும் காலை முதல் மாலை வரை வழக்கம் போல வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் மாலையில் லேசான சாரல் மழையுடன் ‌ மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை நீடித்தது. கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி கயத்தார், எட்டையபுரம், வானர முட்டி, திட்டங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. கயத்தார் பகுதியில் இடி மின்னல் தாக்கி பனிக்கர்குளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது 11 ஆடுகள், சமுத்திர பாண்டி என்பவரது 7 ஆடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த துரைப்பாண்டி என்பவர் மின்னல் தாக்கியதில் மயக்கம் அடைந்தார். பின்னால் அங்கிருந்த மக்கள் அவரை மீட்டனர்.

 

Tags : கோவில்பட்டி பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக  மழை - மின்னல் தாக்கியதில் 18 ஆடுகள் உயிரிழப்பு

Share via