அரசு பள்ளி வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம்  வாக்குவாதத்தால் பரபரப்பு.

by Editor / 09-08-2024 11:28:20pm
 அரசு பள்ளி வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம்  வாக்குவாதத்தால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் வகுப்பறையில் ரசாயன பாட்டில் ஒன்று கீழே விழுந்து உடைந்ததால் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஏழு மாணவிகள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் இரவில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே காத்திருந்த பெற்றோர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

பெற்றோர்கள் சம்பவம் காலை 10 மணிக்கு நடைபெற்றதாகவும் ஆசிரியர்கள் அலட்சியப் போக்கின் காரணமாக மாலை 3 மணிக்கு மேல் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனால் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளின் நிலைக்கு ஆசிரியர்களே காரணம் எனக்கூறி மருத்துவமனை வளாகத்தில் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் வகுப்பு ஆசிரியையை மருத்துவமனைக்கு பெற்றோர்கள் தொலைபேசி மூலம் அழைத்த நிலையில் அவர் தனக்கு மருத்துவமனைக்கு வருவதற்கு அவசியம் இல்லை எனக் கூறியதாகவும் கூறி பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வகுப்பறையில் உடைந்த ரசாயன பாட்டிலை ஆய்வுக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தென்காசி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்து மாணவிகள் மயக்கம்  வாக்குவாதத்தால் பரபரப்பு.

Share via