பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்

புதுக்கோட்டை மாவட்டம் கும்பங்குளம் தோப்புக்கொல்லையைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று காலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதையடுத்து, பாம்பை ஒரு கேரி பேக்கில் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :