விமான விபத்து: களத்தில் இறங்கிய NIA

அகமதாபாத் விமான விபத்து குறித்து NIA அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 13) ஏர் இந்திய விமானம் விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 241 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தின் கருப்பு பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை விமான விபத்தில் மேற்கொள்ள விசாரணை குறித்து அதிகாரிகளிடம் தகவல்களும் கேட்டறிந்துள்ளனர்.
Tags :