தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு.

by Admin / 27-10-2021 06:04:10pm
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீ பாதுகாப்பு  விழிப்புணர்வு.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட அலுவலர் தென்காசி செல்வி கவிதா அவர்களின் உத்தரவுபடி செங்கோட்டை நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் செந்தில்குமார், கோமதி சங்கர் ராஜா, இசக்கிதுரை, ஆகிய குழுவினருடன் தேன்பொத்தை செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு செயல்முறை விளக்கம் மற்றும் பட்டாசுகள் எப்படி வெடிக்க வேண்டும் எப்படி வெடிக்கக் கூடாது என்பதை பற்றிய விளக்கமும் மற்றும் தீக்காயம் ஏற்பட்டவர்கள் எப்படி முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும் என்ற விளக்கமும் செயல்முறையாக செய்து காண்பிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo