திடீரென தீப்பிடித்த டிரான்ஸ்பார்ம்- பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
மதுரை மேலூர் அருகே புலி மலைப்பட்டி செல்லும் சாலை செல்லும் வழக்கில் 250 கிலோ வாட் செயல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மில் இன்று காலை திடீரென்று லேசான தீப்பொறி பறந்துள்ளது. பின் அடுத்து சில நிமிடங்களில் கரும்புகை ஏற்பட்டு தீ மளமளவென எரிந்தது. இதனால் அப்பகுதியை மக்கள் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்ல வேலையாக பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
Tags :