மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கக்கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 23-06-2026 12:05:19am
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கக்கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கக்கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சட்டப்பேரவையில் ஜோன் 19 அன்று கொண்டுவரப்பட்ட மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் அதில் சேர்க்கப்பட்டு இருந்தது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி இந்த திருத்தம் இடைச்செருகலாக  சேர்க்கப்பட்டது.  அவையின் உரிமை மீறல் என்றும் உரிமைப் பிரச்சினை எழுப்ப அனுமதிகேட்க  சபாநாயகர் மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியேறினர். புதிய தீர்ப்பாயம் அமைப்பது முதலையின் வாயில் சென்று சிக்குவது போல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும்- மாநிலத்தின் நீர் உரிமையையும் பாதிக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்..

 

Tags :

Share via

More stories

Logo