இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு  கட்டாயம்: லாலு பிரசாத் கருத்து

by Editor / 23-09-2021 03:55:25pm
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு  கட்டாயம்: லாலு பிரசாத் கருத்து



இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை என்று பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.


பாட்னாவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய லாலு பிரசாத் கூறியதாவது;
சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முதலில் எழுப்பியது தாம் தான் என்றும் இதே கோரிக்கையை நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி இருப்பதாக, லாலு குறிப்பிட்டார். சுதந்திரத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய லாலு, தற்போதுள்ள இட ஒதுக்கீடு போதுமானது அல்ல என்று தெரிவித்தார்.


பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்கள் தொகை குறித்த புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள லாலு, இதற்காக புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு , அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதற்கு தற்போதைய 50% அதிகபட்ச இட ஒதுக்கீடு தடையாக இருக்குமானால் அத்தனையும் உடைக்க வேண்டும் என்றும் மொத்த மக்கள் தொகையில் ஓபிசி பட்டியலின பிரிவினர் அதிகமாக இருந்தால், 50% ஆக இருக்கும் அதிகபட்ச இட ஒதுக்கீட்டை உயர்த்தலாம் என்றும் லாலு கூறியுள்ளார்.

 

Tags :

Share via