தமிழக அரசு கைவிடச் சொன்னது ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டம்-தென்னக ரயில்வே விளக்கம்.
கடந்த ஜனவரி 10 அன்று சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களை பற்றி தனித்தனியாக கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டனர். இதனால் அதிக சத்தமும் குழப்பமும் நிலவியது. அப்போது ஒரு செய்தியாளர் மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் பற்றி கேட்டார். ஒரே நேரத்தில் பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் தூத்துக்குடி என்பது அமைச்சர் காதில் தனுஷ்கோடி என்று பதிவானது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நில ஆர்ஜிதம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனை காரணமாக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிட கோரி கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்தார். செய்தியாளர்கள் ஒரே நேரத்தில் தனித்தனி திட்டங்கள் பற்றி கேள்வி கேட்டதால் அமைச்சருடைய பதில் தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு என தவறான தகவல் பரிமாற்றம் ஆகிவிட்டது. மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்கு எந்த விதமான நில ஆர்ஜிதப் பிரச்சனையும் இல்லை.
Tags : தமிழக அரசு கைவிடச் சொன்னது ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டம்-தென்னக ரயில்வே விளக்கம்.