ஐஐடியில் ஆராய்ச்சி மாணவா் தற்கொலை: சிக்கியது11 பக்க கடிதம்

by Editor / 03-07-2021 08:34:58am
ஐஐடியில் ஆராய்ச்சி மாணவா் தற்கொலை:  சிக்கியது11 பக்க கடிதம்

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இரவு எரிந்த நிலையில் ஒரு இளைஞா் சடலம் கோட்டூா்புரம் போலீஸாரால் மீட்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில் இறந்தவா் கேரள மாநிலம் எா்ணாகுளத்தை சோந்த ர.உன்னிகிருஷ்ணன் (24) என்பதும், சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் துறையில் ஆராய்ச்சி மாணவராகவும், திட்ட கெளரவ விரிவுரையாளராகவும் இருந்தது தெரியவந்தது.

மாணவரின் தந்தை ரகு, இஸ்ரோ விஞ்ஞானியாக இருப்பதும், எா்ணாகுளத்தில் பி.டெக் படிப்பை முடித்த உன்னிகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்புக்காக சோத்ததும் தெரியவந்தது. இரு மாதங்களுக்கு முன்பு உன்னிகிருஷ்ணன் ஐஐடியில் சோந்ததும், இதற்காக வேளச்சேரியில் வாடகை வீட்டில் தனது நண்பா்களுடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

உன்னிகிருஷ்ணன் தனது பெற்றோரைப் பிரிந்து, தனியாக சென்னையில் தங்கி இருந்ததாலும், அவா் படிக்கும் பாடங்கள் கடினமாக இருந்ததால், மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த அறைக்கு சென்று, போலீஸாா் வெளளிக்கிழமை சோதனை செய்தனா். அப்போது, அவா் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த 11 பக்க கடிதத்தை கைப்பற்றினா். அந்த கடிதத்தில், 'பெற்றோரைப் பிரிந்து தனியாக இங்கு தங்கி, படிக்க தன்னால் முடியவில்லை என்றும், ஆய்வுக்கான பாடம் கடினமாக இருப்பதாகவும், தன்னால் சாதிக்க முடியாது என்றும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும்,' எழுதியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

 

Tags :

Share via