20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்ற  வண்டலூர் மனித குரங்கு 

by Editor / 24-07-2021 05:22:34pm
20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்ற  வண்டலூர் மனித குரங்கு 

 


சிங்கப்பூரில் இருந்து ஆண், பெண் என இரண்டு மனித குரங்குகள் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. கவுரி -கோம்பி என்று பெயரிடப்பட்டன. வண்டலூர் பூங்காவிற்கு செல்லும் பார்வையாளர்கள் கண்களில் முதலில் படுவது இந்த மனித குரங்குகள்தான். இந்த மனித குரங்குகளுக்கு என ஒரு செயற்கை குகை உருவாக்கி வைத்துள்ளது பூங்கா நிர்வாகம். 


கவுரி -கோம்பி மனித குரங்குகளை இனவிருத்தி அடையச்செய்ய பூங்கா விலங்குகள் பராமரிப்பாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காமல் இருந்தது. கொரோனாவின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 17ம்தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரைக்கும் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த காலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் பூங்காவில் அமைதியான சூழல் அமைந்தது. இதனால், கவுரி -கோம்பிக்கு காதல் மலர்ந்தது. காதலின் உச்சத்தில் இணைசேர்ந்தது.240 நாள் கர்ப்ப காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்னர் குட்டியை ஈன்றது கவுரி. 20 ஆண்டுகளுக்கு பின்னர் மனித குரங்கு குட்டியை ஈன்றதால், பூங்கா மருத்துவர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via