வீட்டில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது

கன்னியாகுமரி மாவட்டம்-கேரளா எல்லைப்பகுதியில் உள்ளது அருவிக்கரை. இந்த பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அருகே உள்ள மயிலாடும்பாறை கீழக்கரை புத்தன் வீடு பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த வல்சலா என்ற பெண் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.இதையடுத்து போலீசார் அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டில் 21 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், வல்சலாவை கைது செய்தனர். இவர், அருவிக்கரையை சேர்ந்த தனது சகோதரர்களுடன் சேர்ந்து கஞ்சா பதுக்கியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவரது உறவினரான சாபு, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கலால் துறையினரிடம் பிடிபட்டார் என்பது குறிப்பித்தக்கது.
Tags :