நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு, கட்சியின் மருத்துவ அணி ஒன்றியத் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமை வகித்து திறந்து வைத்தார். கமுதி ஒன்றியத் தலைவர் மதன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியச் செயலர் சின்னராஜ், இணைச் செயலர் ரமேஷ், இளைஞரணி தலைவர் முனீஸ்வரன், மாணவரணி தலைவர் அஜித், தொண்டரணி தலைவர் வேதா, விவசாய அணி தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் முனியாண்டி, கருப்பசாமி, திருப்பதி, பாரதி, கோகுலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags :