கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழக பொது நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு போனஸ் தமிழக அரசு வழங்கி வருகின்றது. அந்த வகையில் நேற்று போக்குவரத்து பணியாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போனஸ் அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்பின்படி, சுமார் 44,081 பணியாளர்களுக்கு ரூ.44.11 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.. உபரித் தொகை உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிபவர்களுக்கு அதிகபட்சமாக 20% போனஸ் வழங்கப்படும்உபரித் தொகை இல்லாத சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.. இந்த அறிவிப்பு, பல கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது..
Tags :



















