இன்று குஜராத் அமைச்சரவையிலிருந்த16 அமைச்சர்கள் ராஜினாமா
இன்று குஜராத் அமைச்சரவையிலிருந்த16 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர... இதன் காரணமாக, புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக அமைச்சரவையை மாற்றியமைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
ராஜினாமா அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதல்வர் பூபேந்திர படேலிடம் அளித்தனர்.விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், புதிய மற்றும் திறன்மிக்க அமைச்சரவையை அமைப்பதே இந்த மாற்றத்திற்கான முக்கிய நோக்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா அக்டோபர் 17, 2025 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு காந்திநகரில் நடைபெற உள்ளது.இந்த அமைச்சரவை மாற்றத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர்பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நகராட்சிகள், மாநகராட்சிகள், மாவட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.
Tags :



















